50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
டெஹ்ரான்: ஈரானில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், முக்கிய நீர் தேக்கங்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் 41 டிகிரி செல்ஷியஸ் வெயில் நேற்று பதிவானது. இது மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை வீசி வருவதால், ஈரானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
குறிப்பாக, அந்நாட்டின் தெற்கு பகுதி கடும் வறட்சியை சந்திக்கிறது.
டெஹ்ரானுக்கு நீர் வழங்கும் அணைகள், இந்த நுாற்றாண்டிலேயே முதன்முறையாக வறண்டு காணப்படுகின்றன.
நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் தலைநகரின் சில பகுதிகளில் தண்ணீர் வினியோகத்தை அரசு குறைத்துள்ளது. அங்கு 12 முதல் 18 மணி நேரம் வரை தண்ணீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
ஈரான் முழுதும், தண்ணீரை சேமிக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க உதவும் வகையில், பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்கும்படி டெஹ்ரான் மாகாண நீர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தால், பல ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம் நிலத்தடி நீர் ஆதாரங்களை அதிகமாக சுரண்டுவதும் வறட்சிக்கு காரணமாக அமைந்துவிட்டதாக, ஈரான் அரசு கூறியுள்ளது.
மேலும்
-
இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?
-
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்
-
கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்
-
சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?
-
தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறி: அண்ணாமலை