துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு

புதுடில்லி: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று எதிர்க்கட்சிகளின் அமளியுடன் துவங்கியது. ராஜ்ய சபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும், சபையில் முழக்கமிட்ட எதிர்க்கட்சியினரை அமைதிப்படுத்துவதில் மும்முரம் காட்டினார்.
இந்தச் சூழலில், திடீரென துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜக்தீப் தன்கர் நேற்றிரவு அறிவித்தார். மேலும், தன் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
அதில், மருத்துவ காரணங்களுக்காக பதவி விலக முடிவு எடுத்ததாக ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 22) துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
யார் இந்த ஜக்தீப்?
* கடந்த 2022ல் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றார்.
* இவர், 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மேற்கு வங்க கவர்னராக ஜக்தீப் தன்கர் இருந்தார்.
* 1990ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான இணையமைச்சராக பதவி வகித்தார்.
@block_P@
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ஜக்தீப் தன்கர் இந்திய துணை ஜனாதிபதி பதவி உட்பட பல பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.block_P




மேலும்
-
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்
-
கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்
-
சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?
-
தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறி: அண்ணாமலை
-
41 ஆண்டு கால வரலாறு: இதுவரை யாராலும் முறியடிக்கப்படாத பி.டி.உஷாவின் சாதனை!