தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040

1


சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிந்து ஒரு சவரன் ரூ.74,040க்கு விற்பனை ஆகிறது.


சர்வதேச நிலவரங்களால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உச்சவிலை தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் 74,560 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

பின், தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்தாலும், புதிய உச்சத்தை எட்டவில்லை. நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம் 9,285 ரூபாய்க்கும், சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூலை 23), தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து, 9,380 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 75,000 ரூபாயை தாண்டி, 75,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



இந்நிலையில், இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிந்து ஒரு சவரன் ரூ.74,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.ஆயிரம் குறைந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

Advertisement