ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

சென்னை: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், ஆடித் திருவாதிரை விழா, ஜூலை 27ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக, பிரதமர் மோடி, ஜூலை 26ம் தேதி தமிழகம் வருகிறார். துாத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரயில்வே உட்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை - போடி இடையே, 90 கி.மீ., மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின், முன்னோட்டமாக ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி 21; ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் 12; திருநெல்வேலி - மேலப்பாளையம் 4 கி.மீ., துாரம் என, மூன்று இரட்டை பாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட திட்டப் பணிகள், 1,000 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் திட்டங்களைபிரதமர் மோடி ஜூலை 26ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு கூறினர்.


மேலும்
-
ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு
-
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்
-
பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
-
திருவள்ளூர் சிறுமி பலாத்காரம்: மே.வங்கத்தை சேர்ந்தவர் கைது
-
ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு
-
செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது