டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை

சென்னை: 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4' தேர்வில், தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும்; பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் தேர்வில் கேட்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4' தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 100 கேள்விகள் உள்ளன. இம்மாதம், 7ம் தேதி நடத்தப்பட்ட தேர்வில், தமிழ் பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட, 100 கேள்விகளில், 50க்கும் மேற்பட்டவை, பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள். புரியாதபடி, மிகவும் சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டதாக, தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறை மதிப்பெண்இல்லை என்பதால், அனைத்து தேர்வாளர்களும், ஏதோ ஒரு விடையை தேர்வு செய்திருக்கின்றனர். இதனால் தேர்வுக்கு கடினமாக உழைத்து தயாரானவர்களும், இறுதியில்அதிர்ஷ்டம் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக, அரசு வேலைக்கு தங்கள் நேரத்தையும், கடின உழைப்பையும் கொடுத்து, பாடுபட்ட இளைஞர்கள், இறுதியில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால், தங்கள் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்கு உரியது. இது, தவிர்க்கப்பட வேண்டியது.
அரசு வேலை என்று கனவுகளோடு, தேர்வுக்கு தயாரான இளைஞர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை கேட்டு, யாரோ செய்த தவறுக்காக பலியாக்குவதில் நியாயமில்லை. எனவே, 'குரூப் - 4' தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு
-
காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்
-
பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; புள்ளி விவரம் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
-
திருவள்ளூர் சிறுமி பலாத்காரம்: மே.வங்கத்தை சேர்ந்தவர் கைது
-
ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி பேச்சு
-
செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது