ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தங்கக்காசுகள், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்

5


புவனேஸ்வர்: முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் தங்கக்காசுகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிசாவில் ஜஜ்புர் மாவட்டத்தில் வனத்துறை துணை ரேஞ்சராக இருக்கும் ராம சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்த சோதனையில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.

Tamil News
Tamil News
மேலும், 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் கொண்ட 16 தங்கக்காசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவருக்கு சொந்தமான பூர்விக வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.
2வது ரெய்டு
கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும். இதற்கு முன் கேயின்ஜர் பகுதியில் டிவிஷனல் அதிகாரி நித்யானந்தா நாயக் என்பவரருக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு நடந்தது. அதில், அவரது பெயரில் 115 இடங்கள் , 200 கிராம் தங்கக்காசுகள், ரைபிள்கள், கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், ரூ.1.55 லட்சம் ரொக்கம், தேக்கு மரப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement