தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு

1


சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,280க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,760 சரிந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 24), ஆபரண தங்கம் கிராம், 9,255 ரூபாய்க்கும், சவரன், 74,040 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூலை 25) தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 9,210 ரூபாய்க்கும், சவரனுக்கு, 360 ரூபாய் சரிவடைந்து, 73,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


இந்நிலையில், இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,280க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,760 சரிந்துள்ளது.

Advertisement