பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு

17

சென்னை; தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இன்று சந்தித்து பேச உள்ளார்.



2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு 7.50க்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.


விழா முடிந்த பிறகு ,தனி விமானம் மூலம் திருச்சி பயணிக்கும் பிரதமர் மோடி அங்கு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். திருச்சி வரும் பிரதமரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்,, சந்திக்கிறார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்திக்கின்றனர்.


அப்போது தமிழக அரசியல் நிலவரம், தாம் மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரம் குறித்து அவர் பிரதமரிடம் சில நிமிடங்கள் பகிர்வார் என்று தெரிகிறது.


இ.பி.எஸ்.,சை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில், ஓ. பன்னீர் செல்வம் பிரதமரை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் பிரதமரை சந்திக்கும் 13 பேர் கொண்ட பெயர் பட்டியலில் ஓ.பி.எஸ்., பெயர் இடம் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement