பார்லியில் ஜூலை 28, 29ல் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம்

புதுடில்லி: ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி ஜூலை 28ல் லோக்சபாவில் 16 மணி நேரமும், ஜூலை 29ல் ராஜ்யசபாவில் 16 மணி நேரமும் விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
@1brபீஹாரின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பார்லிமென்டின் இரு அவைகளிலும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் அமளி மற்றும் கூச்சல், குழப்பத்தால் பார்லிமென்ட் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தினமும், எதிர்க்கட்சிகள் அமளியால் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இன்றைய அலுவலும் பாதிக்கப்பட, இரு அவைகளும் திங்கட்கிழமை முற்பகல் 11 மணி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
பீஹார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்பி உள்ளன. பார்லிமென்ட்டில் ஏற்படும் இடையூறு காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அனைத்து பிரச்னைகளையும் ஒன்றாக விவாதிக்க முடியாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றுக்கு மத்திய அரசின் பதில் குறித்து சிறப்பு அமர்வுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
இன்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அலுவல் ஆலோசனைக் குழுவை அழைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
முதலில் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி விவாதிக்கப்படும் என்று நாங்கள் அவர்களிடம் (எதிர்க்கட்சிகள்) கூறி உள்ளோம். அதன் பின்னர் எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
' ஆபரேஷன் சிந்தூர்' குறித்து திங்கட்கிழமை (ஜூலை28) லோக்சபாவில் 16 மணி நேரமும், செவ்வாய்கிழமை (ஜூலை 29) ராஜ்யசபாவில் 16 மணி நேரமும் விவாதிக்கப்படும்.
எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்குவதற்கான நடவடிக்கைகள் லோக்சபாவில் தொடங்கும்,
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ஆபரேஷன் சிந்துார் மீதான விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். அனுராக் தாக்கூர், நிஷகாந்த் துபே ஆகியோரும் பேச உள்ளனர். விவாதத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்று பேச உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை
-
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
-
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு
-
பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு
Advertisement
Advertisement