முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில், ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பத்து பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர்கூட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வந்துள்ளனர்.அதில் 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திருந்தனர்.
ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், பொதிகுளம் கிராமம் அருகே கண்மாய் கரையில் கவிழ்ந்ததில் மூன்று
பொன்னம்மாள்(60), ராக்கி (65), முனியம்மாள்(65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
காயம் பட்ட 8 பெண்கள், 2 ஆண் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
ஆனந்த் - madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 22:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை
-
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
-
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு
-
பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு
Advertisement
Advertisement