நெருப்புடன் விளையாட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

57

சென்னை: பீஹார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், '' நெருப்புடன் விளையாட வேண்டாம்,'' என தெரிவித்துள்ளார்.


பீஹாரில் நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் மீது ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தவறாக பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும்கருத்துவேறுபாடுகொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜ.,வுக்கு சாதகமாக மாற்றவும் பயன்படுத்தப்படுகிறது. இது சீர்திருத்தம் பற்றியது அல்ல.விளைவுகளை பற்றியது. பீஹாரில் நடந்தது சொல்வது என்றால், ஒரு காலத்தில் வாக்களித்த சமூகம் மீண்டும் அவர்களுக்கே ஓட்டுப்போடுவார்கள் என்பது டில்லி ராஜ்ஜியத்துக்கு தெரியும். இதனால், அவர்களை ஓட்டுப்போடுவதை தடுக்க முயற்சி செய்கின்றனர்.

@twitter@https://x.com/mkstalin/status/1948726201234981341 twitter
உங்களால் எங்களை தோற்கடிக்க முடியவில்லை என்றால், எங்களை நீக்க முயற்சி செய்கிறீர்கள். நெருப்புடன் விளையாட வேண்டாம். நமது ஜனநாயகத்துக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் உறுதியுடன் எதிர்ப்போம்.

தமிழகம் முழுபலத்துடன் குரல் எழுப்பும். நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களை பயன்படுத்தி இந்த அநீதிக்கு எதிராக போராடுவோம். அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும்: இது ஒரு மாநிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நமது குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. ஜனநாயகம் மக்களுக்கு சொந்தமானது. அது திருடப்படக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement