கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆந்திர பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரம், வைர தோடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் அனுதீப் ரெட்டி 36. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் ஆடி அமாவாசையில் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.

இரவு தனியார் ஓட்டலில் சாப்பிட காரை சீதா தீர்த்தம் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வந்துள்ளார். அப்போது திருட்டு கும்பல் கார் கண்ணாடியை உடைத்து காரினுள் பேக்கில் இருந்த 5 பவுன் உள்ள 4 தங்க மோதிரங்கள், 2 வைர தோடுகளை திருடி சென்றனர். சாப்பிட்டு விட்டு காரை பார்த்த அனுதீப் ரெட்டி தங்கம், வைரம் அணிகலன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம். இது குறித்து ராமேஸ்வரம் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் இதுபோன்ற திருட்டு கும்பலால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

Advertisement