பைக் - கார் மோதி விபத்து தொழிலாளிகள் மூவர் பலி
குளித்தலை : பைக் -- கார் மோதிய விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், மாயனுார் பஞ்சாயத்து, காட்டூரை சேர்ந்தவர் தனபால், 37; கொத்தனார். லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி சித்ரா, 30, மாயனுார், சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி ராமாயி, 36. மூவரும் ஒரே பைக்கில், மாயனுாரில் கட்டட தொழிலுக்கு சென்று, வீட்டுக்கு செல்ல நேற்று மாலை திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர்.
மாயனுார் போலீஸ் ஸ்டேஷன், மின்வாரிய அலுவலகம் அருகில் வந்த போது, கோவையை சேர்ந்த ரஞ்சித், 35, தன் ஹோண்டா காரில், முன்னால் சென்ற பஸ்ஸை ஓவர்டேக் செய்ய முயன்ற போது, தனபால் ஓட்டி வந்த பைக் மீது கார் மோதியது. இந்த விபத்தில், தனபால், சித்ரா, ராமாயி மூவரும் உடல் நசுங்கி பலியாயினர். மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement