மாலத்தீவுக்கு ரூ.5,000 கோடி கடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

மாலே : ''மாலத்தீவுகள், இந்தியாவுக்கு அண்டை நாடு மட்டுமல்ல, சக பயணியாகவும் உள்ளது. அந்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளோம்,'' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நம் அண்டை நாடான மாலத்தீவுக்கு நேற்று சென்றார். அங்கு, இந்தியா - மாலத்தீவுகள் இடையே நட்புறவை மேம்படுத்துவது குறித்து அதிபர் முகமது முய்சுவை சந்தித்து பிரதமர் மோடி நேற்று பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இதுதவிர ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
https://www.youtube.com/watch?v=Jlp-V7ntyDM
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, இச்சந்திப்பின் வாயிலாக புதிய உச்சத்தை தொடும். மாலத்தீவுகளின் உண்மையான நட்பு நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மாலத்தீவுகளை, இந்தியா தன் அண்டை நாடாக மட்டும் கருதவில்லை; சக பயணியாக கருதுகிறது.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும், பேரிடர் காலங்களிலும் மாலத்தீவுகளுடன் முதல் நாடாக இந்தியா எப்போதும் துணைநின்றுள்ளது. மாலத்தீவுகள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தியா சார்பில் 4,800 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உள்ளது.
இதேபோல் மாலத்தீவுகளின் ராணுவத்தை பலப்படுத்த இந்தியா முழுஒத்துழைப்பு அளிக்கும். ராணுவ நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு விவகாரங்களிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும். கடல்சார் பாதுகாப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலத்தீவுகளின் 60வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக நம் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதன்பின் பிரதமர் தாயகம் திரும்ப உள்ளார்.
@block_B@ 21 குண்டுகள் முழங்க வரவேற்பு மாலத்தீவுகளுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அங்குள்ள குடியரசு சதுக்கத்தில் அந்நாட்டு அதிபர் முகமது முய்சு வரவேற்றார். அப்போது, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவருடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை, மாலத்தீவு அதிபரிடம் அறிமுகம் செய்தார். முன்னதாக, 2023ல் மாலத்தீவுகள் அதிபராக பொறுப்பேற்ற சீன ஆதரவாளரான முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையே உறவில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், கடந்த ஆண்டு இந்தியா வந்த முகமது முய்சு, நட்பு பாராட்டியதுடன், தங்கள் நாட்டுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்
Advertisement
Advertisement