சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி: பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 17 எம்.பி.,க்களுக்கு 2025ம் ஆண்டுக்கான 'சன்சத் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே, ஜார்க்கண்ட் பாஜ எம்.பி., நிஷிகாந்த் துபே, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் ஆகியோருக்கு இந்த வழங்கப்படுகிறது.
அதேபோல, 3 பார்லிமென்ட் கூட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த நான்கு சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒடிசா பாஜ எம்.பி., பர்த்ருஹரி மகதாப், கேரள எம்.பி., என்.கே. பிரேமச்சந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே மற்றும் சிவசேனா கட்சி எம்.பி., ஸ்ரீரங் அப்பா சந்து பார்னே ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 16வது (2014-2019) லோக் சபாவிலிருந்து தொடர்ந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிற விருதுகளை பெறும் எம்.பி.,க்கள்
ஸ்மிதா உதய் வாக் (பாஜ, மஹாராஷ்டிரா)
நரேஷ் மாஸ்கே (சிவசேனா,மஹாராஷ்டிரா)
வர்ஷா கெயிக்வாட் (காங்கிரஸ், மஹாராஷ்டிரா)
மேதா குல்கர்னி (பாஜ, மஹாராஷ்டிரா)
பிரவீன் படேல் (பாஜ, உ.பி.,)
ரவி கிஷான்(பாஜ, உ.பி.,)
பி.பி.சவுத்ரி (பாஜ, ராஜஸ்தான்)
மதன் ரதோர் (பாஜ, ராஜஸ்தான்)
அண்ணாதுரை (திமுக, தமிழகம்)
பித்யுத் பரண் மகதோ (பாஜ, ஜார்க்கண்ட்)
திலீப் சைகியா (பாஜ, அசாம்)







மேலும்
-
தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
-
அ.தி.மு.க., அரசின் திட்டங்களில் தி.மு.க., 'ஸ்டிக்கர்'; மா.செ.,க்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி
-
கட்டடம் இருக்கு; புத்தகம் இருக்கு... சொல்லி தர யார் இருக்கா?: அரசு கலை கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை
-
டில்லி உஷ்ஷ்ஷ்: பீஹார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்குமா?
-
பா.ஜ.,விடம் இருந்து முதலில் அ.தி.மு.க.,வை மீட்டெடுங்கள்: பழனிசாமிக்கு உதயநிதி அறிவுரை
-
'கொலைகள் அதிகரிப்புக்கு மணல் கொள்ளையே காரணம்'