சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்

புதுடில்லி: பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதேநேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.,கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த சூழலில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:
பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதே நேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை. 2007ம் ஆண்டுகளில், சரத் பவார் அப்போது வேளாண் அமைச்சராக இருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. விவசாயம் குறித்து ஒரு விவாதம் நடந்தது.
அவருக்கு நல்ல விவசாயக் கொள்கை இருந்தது. பல எம்.பி.க்கள் நன்றாகப் பேசினர். மறுநாள், எந்த செய்தித்தாளும் சரத் பவாரின் பெயரை வெளியிடவில்லை. அப்படியானால், அது செய்தியாகாதபோது அல்லது மக்கள் அதை விரும்பாதபோது நீங்கள் எப்படி ஒரு நல்ல வேலையைச் செய்ய முடியும்?
எனவே, எம்.பி.க்கள் தலைப்புச் செய்திகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஏனெனில் ஒரு நல்ல உரையை நிகழ்த்தி நல்ல வேலையைச் செய்வதன் மூலம், தொகுதி மக்களுக்கு அது பற்றித் தெரியாது.
பொதுமக்களும் அதைக் கேட்பதில்லை, அது செய்திகளில் வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழலில், தனது அதிருப்தியை கிரண் ரிஜிஜூ வெளிப்படுத்தி உள்ளார்.




மேலும்
-
750 மெகாவாட் 'பேட்டரி ஸ்டோரேஜ்' பசுமை மின்சாரத்தை சேமிக்க அனுமதி
-
'ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்?'
-
தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
-
அ.தி.மு.க., அரசின் திட்டங்களில் தி.மு.க., 'ஸ்டிக்கர்'; மா.செ.,க்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி
-
கட்டடம் இருக்கு; புத்தகம் இருக்கு... சொல்லி தர யார் இருக்கா?: அரசு கலை கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை
-
டில்லி உஷ்ஷ்ஷ்: பீஹார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்குமா?