தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்
பாங்காக் : தாய்லாந்து -- கம்போடியா இடையே நடக்கும் மோதலை தொடர்ந்து, 'தாய்லாந்தில் உள்ள ஏழு மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்' என, தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்னை உள்ளது. கடந்த மே மாதம் கம்போடியா ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து, தாய்லாந்து ராணுவம் கம்போடிய பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கி, பீரங்கி, ராக்கெட் தாக்குதல்கள் நடத்தியது.
இரு நாடுகள் இடையேயான மோதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்; 15 ராணுவ வீரர்கள், 30 உள்ளூர்வாசிகள் காயம் அடைந்தனர். தாய்லாந்தில் 50,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கம்போடியாவில் 4,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் கூறுகையில், “கம்போடியாவுடனான மோதல் காரணமாக தாய்லாந்துக்குள் ஊடுருவல், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மோசமான சூழ்நிலை உள்ளது,” என குறிப்பிட்டிருந்தார்.
தாய்லாந்து - கம்போடியா இடையோன மோதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்தது.
அதில். 'இரு நாடுகளின் எல்லையில் உள்ள உபோன் ரட்சதானி, சூரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு, இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்' என, தெரிவித்துள்ளது.
மேலும்
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
-
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்
-
சர்ச்சைகளால் தலைப்புச் செய்தியாகும் எம்.பி.,க்கள்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வருத்தம்