பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு

1

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு, ஐந்து ஆண்டுகளில், 362 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில் நடப்பாண்டில் இதுவரை மட்டும், 67 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவுகள் தொடர்பாக, ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., - எம்.பி., டெரெக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்:

கடந்த 2021 - 2025 ஜூலை வரை, அரசுமுறை பயணமாக, 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இதில், 2021 - 24 வரை, 295 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. அதே சமயம் நடப்பாண்டில் இதுவரை, 67 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வெளிநாட்டு பயணங்களுக்கு, 2021ல், 36 கோடி; 2022ல், 56 கோடி; 2023ல், 93 கோடி; 2024ல், 109 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. 2023ல், பிரதமர் மோடி எகிப்துக்கு சென்ற போது, அவரது பயண விளம்பரத்துக்கு மட்டும், 11.90 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

இவ்வாறு பதிலில் கூறப்பட்டிருந்தது.

பயண செலவு

ஆண்டு ரூ.கோடியில்

2021 36

2022 56

2023 93

2024 109

2025 ஜூலை 67

@block_B@ இந்திரா சாதனை முறியடிப்பு நாட்டின் பிரதமராக அதிக நாட்கள் தொடர்ச்சியாக இருந்தவர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார். 2014ல் பதவியேற்றது முதல் இதுவரை, 4,078 நாட்கள் பிரதமராக அவர் பதவி வகிக்கிறார். இதற்கு முன், காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1966 ஜன., 24 - 1977 மார்ச் 24 வரை, மொத்தம், 4,077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார். தற்போது இதை முறியடித்த பிரதமர் மோடி, நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மறைந்த நேரு உள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆக., 15 முதல், அவர் இறக்கும் வரை, 1964 மே 27 வரை, 6,130 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக பணியாற்றினார்.block_B

Advertisement