ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள்; போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியால் அதிபர் டிரம்ப் ஆவேசம்!

வாஷிங்டன்: ''ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டினார்.
அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது:
ஹமாஸ் போராளிக் குழுவிற்கு அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் இல்லை. ஹமாஸ் உண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இது மிக மிக மோசமானது. நீங்கள் வேலையை முடிக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு அது சென்றிருக்க வேண்டும்.
அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவித்த பிறகு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஹமாஸ் குழுவின் தலைவர்கள் இப்போது வேட்டையாடப்படுவார்கள். இஸ்ரேல் போராடி தனது வேலையை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு