கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு 1000 ஆடுகள் நேர்த்திக்கடன்

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்டன. இவை சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு அனைத்தும் சமைத்து ஆண்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.


ஆடி அமாவாசை முடிந்த முதல் வெள்ளியின்று இக்கோயிலில் திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று திருவிழா நடக்க சுவாமியிடம் வேண்டிய காரியம் நிறைவேறியதற்காக பக்தர்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளை நேர்த்திக்கடனாக வழங்கினர். நேற்று இரவு ஆகாச பூஜை முடிந்ததும் ஆடுகள் அனைத்தும் கருப்பணசுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு சமைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Advertisement