அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு சீல்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியற்ற தங்கும் விடுதிகளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுறுத்தலின்படி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்படும் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தங்கும் விடுதிகள் (ஹோம் ஸ்டே, காட்டேஜ், ரிசார்ட்) குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 50150- க்கு காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தொலைபேசி மூலமாகவும், 75985 78000 வாட்ஸ் ஆப் எண்ணில் போட்டோ, வீடியோ மூலமாகவும் இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து வந்த புகாரின்படி நேற்று கொடைக்கானல் தாசில்தார் பாபு தலைமையில் இரு காட்டேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு கூறுகையில்,''உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மலைப்பகுதி முழுமையும் 600 க்கு மேற்பட்ட தங்கும் விடுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற காட்டேஜ்கள் சீல் வைக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு