ரேஷன் பொருள் வாங்கி வந்த போது டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கூவர் கூட்டம் மக்கள் பொதிகுளத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் வாங்கி கொண்டு டிராக்டரில் ஊருக்கு வந்த போது அது கவிழ்ந்ததில் 3 பெண்கள் பலியாகினர்.10 பேர் காயம் அடைந்தனர்.
முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ரேஷன் கடை வசதி இல்லை. கார்டுதாரர்கள் பொதிகுளம் கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். நேற்று பொருட்கள் வாங்கிவிட்டு 15க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் கூவர்கூட்டம் கிராமத்திற்கு வந்தனர்.
பொதிகுளம் கண்மாய் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் முனியம்மாள் 65, ராக்கி 65, பொன்னம்மாள் 60, ஆகிய 3 பெண்கள் இறந்தனர். பத்து பேர் காயமடைந்தனர். முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமையிலான வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இளஞ்செம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். சுட்டிக்காட்டிய தினமலர்: கூவர்கூட்டம் கிராமத்திற்கு ரேஷன் கடை வசதி இல்லாததால் பொருட்கள் வாங்க நீண்ட துாரம் சென்று சிரமப்படுவதாகவும், அங்கு பகுதி நேர ரேஷன்கடை அமைக்க வேண்டும் எனவும் பிப்.,8ல் தினமலர் நாளிதழில் ராமநாதபுரம் மாவட்ட செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அங்கு பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டிருந்தால் இந்த உயிர் பலியை தவிர்த்திருக்கலாம்.
இந்நிலையில் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் மூவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பரமக்குடி சப்-கலெக்டர் சரவண பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கிராமத்திற்கு ரோடு வசதி வேண்டும். தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தினர்.
மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு