தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தேனி பஞ்சமி நில பிரச்னையில், தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஐந்து வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.

தேனி, அல்லிநகரத்தை சேர்ந்தவர் நாகராஜ், 56; தி.மு.க., தேனி நகர துணைச்செயலர். இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பஞ்சமி நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு, வருவாய்த்துறை விசாரணை நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சில மாதங்களாக அந்த இடம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பல்வேறு மோதல்கள் நடந்து வருகின்றன. இதில், நாகராஜும் பங்கேற்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சேதுமூர்த்தி, 24, விஸ்வா, 22, உள்ளிட்ட ஐந்து பேர் நாகராஜ் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். நாகராஜ் புகாரில், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஐந்து பேரையும், அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement