நாகப்பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை: பீஹாரில் சம்பவம்

பாட்னா: பீஹாரில் நாகப்பாம்பை ஒரு வயது குழந்தை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு தீண்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீஹார் மாநிலம் பெட்டியாவில் கோவிந்த என்ற குழந்தை, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு திடீரென வந்து குழந்தை அருகே வந்தது. அந்த நாகப்பாம்பு குழந்தையின் கைகளில் சிக்கிய நிலையில் , அதை கையில் பிடித்து எடுத்து கடித்தநிலையில் அந்த நாகப்பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது.
சில மணி நேரம் கழித்து, அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரது குடும்பத்தினர், முதலில் அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அங்கிருந்து பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளது.
குழந்தையின் பாட்டி, மாதேஸ்வரி தேவி கூறுகையில்,
குழந்தையின் தாயார் வீட்டின் அருகே விறகு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விளையாடி கொண்டிருந்த குழந்தை எப்படியோ அந்த பாம்பை கொன்றது. குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது என்றார்.


மேலும்
-
750 மெகாவாட் 'பேட்டரி ஸ்டோரேஜ்' பசுமை மின்சாரத்தை சேமிக்க அனுமதி
-
'ராகுல் தாமதமாக உணர்ந்த தவறை ஸ்டாலின் எப்போது உணருவார்?'
-
தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
-
அ.தி.மு.க., அரசின் திட்டங்களில் தி.மு.க., 'ஸ்டிக்கர்'; மா.செ.,க்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி
-
கட்டடம் இருக்கு; புத்தகம் இருக்கு... சொல்லி தர யார் இருக்கா?: அரசு கலை கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை
-
டில்லி உஷ்ஷ்ஷ்: பீஹார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்குமா?