மம்தாவை இந்த முறை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறது பாஜ

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இம்முறை யாரும் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.


பீஹாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சட்டவிரோதமாக ஊடுருவியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இதற்கு இண்டி கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.


இந்த நிலையில், வங்கதேசத்தில் 1.25 கோடி சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அம்மாநில பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேதினிபூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது 50 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. வங்கத்தில் 1.25 கோடி இருக்கலாம். இவர்களில் பலர் வங்கதேசம், ரோஹிங்கியர்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு இவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.


முதல்வரை (மம்தா) இம்முறை யாரும் காப்பாற்ற முடியாது. கள்ள ஓட்டு குறையும். ஊழல், கொள்ளையும் முடிவுக்கு வரும். நேர்மையாக செயல்படுங்கள், இல்லையெனில் மாவட்ட அதிகாரிகள் சிக்கலில் சிக்குவீர்கள், எனக் கூறினார்.

Advertisement