12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

திருச்சி: ''இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
வரும் 30ம் தேதி, நாசாவும், இஸ்ரோவும் இணைந்து, 'சிந்தடிக் அப்ரசர் ரேடார்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மேக மூட்டம், மழை போன்ற எந்த சூழலிலும் பூமியை படம் பிடிக்கும் திறன் கொண்டது. நிலநடுக்கம், பேரிடர் குறித்த தகவல்களை தரக்கூடிய செயற்கைக்கோளாகவும் உள்ளது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில், 18வது ராக்கெட் இது.
இஸ்ரோவில் இருந்து, இந்த ஆண்டு, 34 விதமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட செயற்கைக்கோள்களுடன், 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் இங்கிருந்து ஏவப்படுகிறது.
பிரதமர் ஒதுக்கீடு செய்த, 20,000 கோடி ரூபாயில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ககன்யான் திட்ட மூலம் இந்தியாவில் தயாரித்த ககன்யான் ஜி1 என்ற செயற்கைக்கோளில், ரோபோ வைத்து, இந்த ஆண்டு டிச., மாதம் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிந்துார் ஆப்பரேஷனுக்கு பின், இந்திய மக்களின் பாதுகாப்பு தேவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். 'சிந்துார் ஆப்பரேஷனுக்கு' நம்முடைய சேட்லைட் துல்லியமான தகவல்களை கொடுத்தது. விண்வெளி துறையில், இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை தீர்த்தம் கொண்டு வந்த மோடி; சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!