மத மாற்ற கும்பலுக்கு நிதி தமிழர் உட்பட 3 பேர் கைது
லக்னோ: மத மாற்ற கும்பலுக்கு நிதி அளித்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் ஜோசுவா, 37, என்ற பெண், ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதாக புகார் எழுந்தது.
விசாரணையில், நிதி நெருக்கடி, வீட்டு தகராறு போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களை, கிரண் ஜோசுவா பிரார்த்தனைக்கு அழைத்துச் சென்று, மூளைச்சலவை செய்து கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியது தெரியவந்தது. விசாரணையில், மத மாற்றத்துக்காக கிரண் ஜோசுவா நிதியுதவி பெற்றது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபன், 45, உ.பி.,யைச் சேர்ந்த கிரண், அஷ்னீத் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், தமிழகம், மஹாராஷ்டிராவை தலைமையிடமாக வைத்து செயல்படும் அறக்கட்டளைகளிடமிருந்து, மத மாற்றங்களுக்கு அவர்கள் நிதி உதவி பெற்றது தெரியவந்தது. மேலும், வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளனர்.
போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!