வினாத்தாள் மோசடியால் 85 லட்சம் இளைஞர்கள் எதிர்காலம் பாதிப்பு: சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் ஜூலை 24 முதல் ஆக., 1 வரை பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கணினி வழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால், முதல்நாளில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 400 - 500 கிமீ தொலைவில் இருந்து தேர்வு எழுத வந்த இளைஞர்கள், தேர்வு மையத்தில் தங்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்தனர். இந்த அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக வினாத்தாள் தொடர்ந்து கசிவு மற்றும் தேர்வு ரத்து செய்யப்படுவதால், லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கடின உழைப்பு, நேரம் மற்றும் நம்பிக்கை வீணடிக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவற்றை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஆட்சேர்ப்பு தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற வாக்குறுதிகள் வெற்று என நிரூபணம் ஆகி உள்ளது.
இதற்கு அரசின் திறமையின்மை, நிர்வாக ஊழல் மற்றும் தேர்வு மாபியாக்களின் கூட்டணியின் விளைவாகும். இளைஞர்களின் கனவுகளுக்கு செய்யப்படும் இந்த துரோகம் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.








மேலும்
-
12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
மோகன் பகவத்- - இமாம், மவுல்வி சந்திப்பு
-
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்!
-
ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்
-
மத மாற்ற கும்பலுக்கு நிதி தமிழர் உட்பட 3 பேர் கைது
-
ஓய்வுக்கு பின் அரசு பதவி ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி