தூத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; துவக்கி வைத்தார் பிரதமர்

தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடந்த விழாவில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.
@1br@பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இரவு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மோடிக்கு, திருவள்ளுவர் சிலையினை தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார்.








மொத்தம், 17,340 சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. இதனால், தென்மாவட்டங்களில், சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்கும்.
பின்,விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில்,
2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நீளத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை;
200 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துாத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதை போன்றவற்றை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 285 கோடி ரூபாயில், ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு சரக்கு தளவாட நிலையம் - 3ஐயும் திறந்து வைத்தார்.
மதுரை - தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ரயில் பாதையில், 90 கி.மீ., மின்மயமாக்கல் பணி;
நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி பிரிவின் 21 கி.மீ., இரட்டைப் பாதை,
ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு 12.87 கி.மீ., மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம், 3.6 கி.மீ., பிரிவுகளின் இரட்டை பாதைப்பணி 1,165 கோடி ரூபாயில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட பணிக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திட்டச்செலவு, 550 கோடி ரூபாய்.
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்த பின், திருச்சி செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் அவர், முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.
வாசகர் கருத்து (12)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 ஜூலை,2025 - 21:08 Report Abuse

0
0
Reply
பாமரன் - ,
26 ஜூலை,2025 - 20:59 Report Abuse

0
0
vivek - ,
26 ஜூலை,2025 - 22:37Report Abuse

0
0
Reply
டாஸ் மாஸ் - ,
26 ஜூலை,2025 - 20:55 Report Abuse

0
0
Reply
krishnan - ,
26 ஜூலை,2025 - 20:40 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
26 ஜூலை,2025 - 20:35 Report Abuse

0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
26 ஜூலை,2025 - 20:19 Report Abuse

0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
26 ஜூலை,2025 - 20:09 Report Abuse

0
0
எஸ் எஸ் - ,
26 ஜூலை,2025 - 20:29Report Abuse

0
0
G Mahalingam - Delhi,இந்தியா
26 ஜூலை,2025 - 20:48Report Abuse

0
0
நடராஜன்,சிவகங்கை - ,
26 ஜூலை,2025 - 20:55Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
27 ஜூலை,2025 - 00:30Report Abuse

0
0
Reply
மேலும்
-
12 ராக்கெட்கள் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
-
மோகன் பகவத்- - இமாம், மவுல்வி சந்திப்பு
-
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஆசிரியர்!
-
ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்
-
மத மாற்ற கும்பலுக்கு நிதி தமிழர் உட்பட 3 பேர் கைது
-
ஓய்வுக்கு பின் அரசு பதவி ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
Advertisement
Advertisement