ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு; செப்.,14ல் இந்தியா - பாக்., மோதல்

2


புதுடில்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செப்.,14ம் தேதி மோதுகின்றன.


2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங், யூ.ஏ.இ., ஓமன் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றிருந்தாலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தனது முடிவை மாற்றிக் கெண்டது. இதனால், அபுதாபி மற்றும் துபாயில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த முறை 50 ஓவர் போட்டியாக நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடர், இந்த முறை டி20 தொடராக நடத்தப்பட உள்ளது.


8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'குரூப் ஏ'வில் இந்தியா, பாகிஸ்தான், யூ.ஏ.இ., ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, 'குரூப் பி'யில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், 'ஹாங் காங் அணிகள் உள்ளன.


செப்., 9ம் தேதி இந்தத் தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி செப்.,8ம் தேதி நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியை செப்.,10ம் தேதி யூ.ஏ.இ.,யை எதிர்த்து விளையாட இருக்கிறது. செப்.,14ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஓமனை எதிர்த்து விளையாட இருக்கிறது.


ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றால், இரு அணிகளும் மோதும் சூழல் உருவாகும். அதேபோல, பைனலுக்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதால், இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதலாம்.


முழு அட்டவணை விபரம்







செப்., 9 (செவ்வாய்): ஆப்கானிஸ்தான் vs ஹாங் காங்

செப்., 10 (புதன்): இந்தியா vs யூ.ஏ.இ.,

செப்., 11 (வியாழன்): வங்கதேசம் vs ஹாங்காங்

செப்டம்பர் 12 (வெள்ளி): பாகிஸ்தான் vs ஓமன்

செப்., 13 (சனி): வங்கதேசம் vs இலங்கை

செப்., 14 (ஞாயிறு): இந்தியா vs பாகிஸ்தான்

செப்., 15 (திங்கள்): இலங்கை vs ஹாங் காங்

செப்., 16 (செவ்வாய்): வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்

செப்., 17 (புதன்): பாகிஸ்தான் vs யூ.ஏ.இ.,

செப்., 18 (வியாழன்): இலங்கை vs ஆப்கானிஸ்தான்

செப்., 19 (வெள்ளி): இந்தியா vs ஓமன்


சூப்பர் 4 சுற்று :





செப்., 20 (சனி): குழு B தகுதி 1 vs குழு B தகுதி 2

செப்., 21 (ஞாயிறு): குழு A தகுதி 1 vs குழு A தகுதி 2

செப்., 22 (திங்கள்): ஓய்வு நாள்

செப்., 23 (செவ்வாய்): குரூப் ஏ தகுதி 1 vs குரூப் பி தகுதி 2

செப்., 24 (புதன்): குரூப் பி தகுதி 1 vs குரூப் ஏ தகுதி 2

செப்., 25 (வியாழன்): குரூப் ஏ தகுதி 2 vs குரூப் பி தகுதி 2

செப்., 26 (வெள்ளி): குரூப் ஏ தகுதி 1 vs குரூப் பி தகுதி 1

செப்., 27 (சனி): ஓய்வு நாள்


இறுதிப் போட்டி:





செப்., 28 (ஞாயிறு): இறுதி போட்டி

பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆசிய கோப்பை இந்தியா புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement