உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த செட்டிகுறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.

முகாமை முன்னாள் ஊராட்சி தலைவர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பாராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் 13 துறைகளின் கீழ் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெரும்பாலான மனுக்களுக்கு அதிகாரிகளுடன் கலந்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில் ஊர் மக்கள் செய்தனர்.

Advertisement