கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு

1


திருச்சி: திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடக்கும் விழாவுக்காக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். சாலையில் திரண்டிருந்த பாஜவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். நேற்றிரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார்.



திருச்சியில் உள்ள ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று (ஜூலை 27) கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலுக்கு செல்கிறார்.


அங்கு வழிபாடு நடத்தும் மோடி, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

Advertisement