கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!

2

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


@1brஉத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 27) சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர். அப்போது திடீரனெ கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.


இந்த துயர சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து போலீஸ் கமிஷனர் வினய் சங்கர் பாண்டே கூறுகையில், ''ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. போலீசார் இருந்தும் நெரிசல் ஏற்பட்டு விட்டது. இனி வரும் காலங்களில் இத்தகைய நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement