அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!

2

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் ஜெட் விமானம் தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் அவசர கால வழியாக வெளியேற்றப்பட்டனர்.


அமெரிக்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு செல்ல இருந்தது. விமானத்தில், 173 பயணிகள் உட்பட 179 பேர் இருந்தனர்.


ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட தயாரான போது, சக்கரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தீயும் புகையும் கடும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அவசரகால சறுக்குகளைப் பயன்படுத்தி 173 பயணிகளும் ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். விமானம் புறப்படும் போது லேண்டிங் கியர் செயலிழந்து தீ பற்றிக் கொண்டதாகவும் இதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரி உள்ளது.

Advertisement