ஆசிரியர்கள் உண்ணாவிரதம்,,

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண் - 311ல் தெரிவித்த படி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் கோபால், மாநில செயற்குழு உறுப்பினர் குகபிரசாத், மாவட்ட பொருளாளர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement