ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் ரெங்கமன்னார் சயனசேவை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் ஏழாம் திருநாளான நேற்றிரவு சயன சேவை உற்ஸவம் கிருஷ்ணர் கோயிலில் நடந்தது.

நேற்று மாலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மாட வீதிகள் சுற்றி கிருஷ்ணர் கோயில் வந்தடைந்தார். அங்கு இரவு 7:30 மணிக்கு மேல் ஆண்டாள் மடியில் ரெங்க மன்னார் சயனத்திருக்கோலத்தில் எழுந்தருளினார். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement