நிழற்குடை பணி துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி அருகே புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவங்கியது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள், அவரது குடும்பத்தினர், பணிபுரியும் ஊழியர்கள் தினமும் வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்படும் பொதுமக்கள் காத்திருக்கும் பஸ் நிறுத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. மர நிழலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மழை, வெயிலில் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன் தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். ஒன்றிய துணை சேர்மன் விமலா முருகன், சிறுவங்கூர் ஊராட்சி தலைவர் சந்திரா, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், துணைத் தலைவர் கொளஞ்சி, ஒன்றிய பொறியாளர் விஜயன், பணி மேற்பார்வையாளர் செந்தில்முருகன், ஊராட்சி செயலர் கோவிந்தராஜி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement