வீடு புகுந்து நகை திருட்டு எஸ்.ஒகையூரில் துணிகரம்
கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் செம்மலை, 58; விவசாயி. இவருக்கு அதே பகுதியில் 2 வீடுகள் உள்ளது. கடந்த 25ம் தேதி இரவு காட்டுகொட்டகை பகுதியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, செம்மலையும் அவரது மனைவி விருத்தாம்பாளும் மற்றொரு வீட்டில் துாங்கினர்.
நேற்று காலை பூட்டிய வீட்டிற்கு சென்ற போது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, அதிலிருந்த 2 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து செம்மலை அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
Advertisement
Advertisement