துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை
மாதநாயக்கனஹள்ளி: நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 250 கிராம், நகைகளை கொள்ளையடித்த, மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே மச்சோஹள்ளி கேட் பகுதியில், 'ராஜ் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தின் கன்னையா லால். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூட, லாலும், கடையில் வேலை செய்யும் ஊழியரும் தயாராக இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்து, நகைக்கடைக்குள் புகுந்த மூன்று நபர்கள், லால், ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டினர். கண்ணிமைக்கும் நேரத்தில் 250 கிராம் நகைகளை, கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளையர்களை மாதநாயக்கனஹள்ளி போலீசார் தேடிவருகின்றனர்.
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!