ஆக.,1 முதல் ஆம்புலன்ஸ் போராட்டம்
பெங்களூரு: அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
'108' ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவா கூறியதாவது:
கர்நாடகாவில் 1,700 ஆம்புலன்ஸ்களில் 3,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
கடந்த ஆண்டில்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 12 மணி நேரம் கொண்ட இரண்டு ஷிப்டு நடைமுறைகள் இருந்தன. அப்போது, மாத சம்பளமாக 32,000 முதல் 35,000 ரூபாய் கிடைத்தது.
இந்த நடைமுறை எட்டு மணி நேரமாக குறைக்கப்பட்டு, மூன்று ஷிப்டு நடைமுறைக்கு வந்தது. தற்போது பல ஊழியர்களுக்கு 12,000 ரூபாய் மட்டுமே மாத சம்பளம் கிடைக்கிறது.
இந்த முறையை மாற்ற வலியுறுத்தி, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
Advertisement
Advertisement