முதலாம் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி!

3

அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விழாவில் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

முதலாம் ராஜேந்திர சோழ மன்னன், தன் தந்தை ராஜராஜன் கட்டிய கோவிலை போலவே கட்டிய கோவில் தான், அரியலுார் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில். கங்கையை வெற்றி கொண்டதன் நினைவாக இந்த நகரம் உருவாக்கி, அதை தன் தலைநகராக மாற்றினார் ராஜேந்திர சோழன்.



Tamil News
அந்த கோவிலில் இன்று ராஜேந்திர சோழன் நாணயம் வெளியிடும் விழா மற்றும் ஆடித்திருவாதிரை விழா, ராஜேந்திரன் வெற்றிகளை கொண்டாடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.

பிரதமர் மோடி, கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.எல்.ஏ.,க்கள், ஆதினங்கள், ஆன்மிக பெரியோர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஓதுவார்களின் தேவார திருமுறை பாராயணம் நடந்தது.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!



தொடர்ந்து இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. குழுவினர் பாடிய ஓம் சிவோஹம் பாடலை பிரதமர் மோடி தாளம் போட்டு ரசித்தார். பாடல் முடிந்ததும், மோடி எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள, 'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க' பாடலை, குழுவினர் பாடினர். அதையும் மோடி பக்தி பரவசத்துடன் கேட்டு ரசித்தார்.

பின்னர், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

Advertisement