மழை விட்டும் தூவானம் விடவில்லை; தாய்லாந்து-கம்போடியா இடையே நீடிக்கும் மோதல்

நாம்பென்; போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து, கம்போடியா நாடுகள் ஒப்புதல் தந்துள்ளதாக டிரம்ப் கூறினாலும், இருநாடுகள் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
எல்லை பிரச்னையின் எதிரொலியாக, கம்போடியா-தாய்லாந்து நாடுகள் இடையே மோதல் மூண்டது. இருதரப்பிலும் மொத்தம் 32 பேர் பலியாக, லட்சக்கணக்கானோர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. அமைப்பும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் வேண்டுகோள் விடுத்து வந்தன. ஒரு கட்டத்தில் கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இருநாடுகளின் தலைவர்களும் மலேசியாவில் நாளை(ஜூலை 28) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில், கம்போடியா,தாய்லாந்து நாடுகள் பரஸ்பரம் மீண்டும் சண்டையை தொடர்ந்துள்ளன. மீண்டும் தொடங்கி உள்ள இந்த மோதலுக்கு இருநாடுகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன.
சுரின் மாகாணம் உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பல இடங்களில் கம்போடியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மனித உரிமைகளுக்கு எதிராக கம்போடியா நடந்து கொள்கிறது. எனவே, சண்டையை நிறுத்த தயாராக இல்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும்
-
ராணுவ தலைமை தளபதி சியாச்சின் பயணம்; ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறை
-
உலக கோப்பை செஸ் பைனலின் 2வது சுற்றும் டிரா; நாளை டை பிரேக்கரில் ஹம்பி - திவ்யா மோதல்
-
துருக்கியை அச்சுறுத்தும் காட்டுத்தீ; வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்
-
எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் கும்பல் சிக்கியது!
-
வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா நிதானம்; முன்னிலை பெற்றது இந்தியா
-
போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: அதிரடிப் படை போலீசார் அதிர்ச்சி