அ.தி.மு.க., சார்பில் வேலை வாய்ப்பு முகாம் 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., மற்றும் ஜெ. அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் உப்பளம், இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

வேலை வாய்ப்பு முகாமை மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெ., அறக்கட்டளை நிறுவனர் பிரபாகரன் செய்திருந்தார்.

முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதில், மாநில இணைச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் மோகன்தாஸ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைத் தலைவர்கள் குணாளன், பாக்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement