போக்குவரத்து துண்டிப்பு: சிக்னல் வரை வந்து திரும்பிய பஸ்கள்

மூணாறு, : நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், 'சிக்னல் பாய்ண்ட்' வரை பஸ்கள் வந்து திரும்பின.

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவரவியல் பூங்கா அருகே நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப் பட்டது. அதனால் தமிழகத்தில் போடி, தேனி, மதுரை உட்பட பல பகுதிகளில் இருந்தும், பூப்பாறை, நெடுங்கண்டம், குமுளி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ்கள் உட்பட வாகனங்கள் மூணாறுக்கு வர இயலவில்லை. சிறிய ரக வாகனங்கள் மாற்று வழிகள் மூலம் மூணாறுக்கு வந்தன.

கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழகம் உட்பட பிற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் மூணாறில் இருந்து 4 கி.மீ., தொலைவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகில் உள்ள 'சிக்னல் பாய்ண்ட்' வரை வந்து திரும்பின.

Advertisement