விநாயகர் சதுர்த்தி: திண்டுக்கல்லில் சிலை தயாரிப்பு பணி மும்முரம்

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு புது முயற்சியாக விநாயகருடன், முருகனும் சேர்ந்திருப்பது போல் சிலைகள் தயாரிக்கப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஹிந்து பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானது. இந்த பண்டிகையின்போது, பல்வேறு ஹிந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை தயாரித்து போலீஸ் அனுமதியுடன் பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவர்.
பூஜை, வழிபாட்டுக்கு பின் மறுநாள், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி ஆக.,27ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 1 அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிவன்-பார்வதி மடியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், சிவபெருமானை விநாயகர் வணங்குவது போலவும் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் தாமரையில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், கற்பக விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் தமிழ்செல்வன் கூறியதாவது : விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேப்பர் கூழ், கிழங்கு மாவு, இயற்கை நிறமிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிலைகளின் உயரம், தரத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை உள்ளது. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பிறகு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திலும் முருகப்பெருமானை இணைக்கும் வகையில் இந்த ஆண்டு புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முருகனுக்கு, விநாயகர் ஆசி வழங்குவது, விநாயகர் அருகே வேலுடன் முருகன் நிற்பது, மயில் ஆகியவற்றையும் விநாயகர் சிலையுடன் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்