அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்

புதுடில்லி: ''அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
@இந்தியா-பிரிட்டன் உடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த, உத்வேகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
இந்தியா எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இந்தியா வலிமையானதாக இருக்கிறது. விவசாயம் மற்றும் எத்தனால் போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா விதிமுறைகள் படியே, பிரிட்டன் உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
எதிர்காலத்திலும் நியூசிலாந்து, ஓமன், அமெரிக்கா அல்லது 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தாலும் இந்தியாவின் ஒப்பந்தங்கள் நன்கு சிந்தித்து உத்தியுடன் செய்யப்படும். அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன.
2025ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலக்கெடுவிற்குள், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக முடிவு செய்து, ஒரு நல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
ஆரூர் ரங் - ,
28 ஜூலை,2025 - 10:53 Report Abuse

0
0
Reply
raju - Madurai,இந்தியா
28 ஜூலை,2025 - 09:53 Report Abuse

0
0
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
28 ஜூலை,2025 - 10:21Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
28 ஜூலை,2025 - 10:41Report Abuse

0
0
Reply
Jack - Redmond,இந்தியா
28 ஜூலை,2025 - 08:47 Report Abuse

0
0
SANKAR - ,
28 ஜூலை,2025 - 10:41Report Abuse

0
0
Reply
subramanian - Mylapore,இந்தியா
28 ஜூலை,2025 - 08:45 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
Advertisement
Advertisement