தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் பரபரப்பான மார்க்கெட்டில் இன்று (ஜூலை 28) மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் வழக்கம் போல் பொருட்களை மக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பாதுகாவலர்கள் நால்வரும், பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும் ஒருவர் பலத்த காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.
துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு கொலையாளி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும்
-
பாம்பன் அருகே ஆட்டோ, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து:2 பேர் பலி
-
நீங்கள் சொன்ன பொய்கள் எத்தனை என்பதை நாளை சொல்கிறோம்: எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா சவால்
-
பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்
-
பார்லியில் நாளை பிரதமர் மோடி, அமித் ஷா உரை; எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில்
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்!
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி