நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதல் விவகாரத்தில் ஐ.டி., ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைதான சுர்ஜித்தின் பெற்றோர் எஸ்.ஐ., சரவணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.ஆர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் பட்டாலியன் போலீசில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
சென்னையில் கவின்குமார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான ஏரலுக்கு வந்து இருந்தார். அப்போது பாளையங்கோட்டைக்கு சென்று தனது காதலியை சந்தித்து பேசி உள்ளார். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில், நேற்று கவினை சந்தித்து அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கவின்குமாரை சுர்ஜித் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே ஐ.டி., ஊழியர் கவின்குமார் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். தப்பியோடிய சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். தற்போது, சுர்ஜித்தின் பெற்றோர் எஸ்.ஐ., சரவணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரியை போலீசார் தேடி வருகின்றனர். பட்டபகலில் ஐ.டி., ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (2)
Balaa - chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 16:22 Report Abuse

0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
28 ஜூலை,2025 - 14:34 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி
-
பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு
-
அம்மாவுக்கு கருணை காட்டுங்க; நர்ஸ் நிமிஷா பிரியா மகள் உருக்கமான வேண்டுகோள்!
-
நான் ஓயப்போவதில்லை; எழுச்சிப்பயணம் தொடரும்: இபிஎஸ்
-
வக்கீல் வெட்டிக்கொலை: 5 பேர்கோர்ட்டில் சரண்
-
பாக்., ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டால் தான் அமைதி ஏற்படும்; ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் திரிணமுல் எம்.பி., பேச்சு
Advertisement
Advertisement