பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

புதுடில்லி: பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேர விவாத்திற்கு முன், எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டில் பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான சிறப்பு விவாதம் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய வேண்டாம், பாகிஸ்தானின் மொழியில் பேச வேண்டாம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்திய பாதுகாப்பு படைகளின் கண்ணியத்தை நாம் பராமரிக்க வேண்டும்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
இந்திய மக்களின் விருப்பத்தின் பேரில்தான் பிரதமர் இந்திய ராணுவத்தின் மூலம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் இன்று லோக்சபாவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்
-
பார்லியில் நாளை பிரதமர் மோடி, அமித் ஷா உரை; எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில்
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்!
-
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி
-
பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு
-
அம்மாவுக்கு கருணை காட்டுங்க; நர்ஸ் நிமிஷா பிரியா மகள் உருக்கமான வேண்டுகோள்!