விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: கடைசி நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து

காசியாபாத்: உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு புறப்பட இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது; ஹிண்டன் விமான நிலையத்தில் நேற்றிரவு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று விமானம் புறப்பட உள்ளது. பயணிகளுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பயணநேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பதிவை ரத்து செய்பவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி செலுத்தப்படும். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசவுகரியத்திற்கு மன்னப்பு கேட்டு கொள்கிறோம், எனக் கூறினார்.
ஏற்கனவே, கடந்த ஜூலை 21ம் தேதி டில்லி - கோல்கட்டா இடையிலான ஏர் இந்தியா விமான சேவை தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது. ஜூலை 23ம் தேதி தோஹாவுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஜுலை 25ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு, அந்நிறுவனத்தின் விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு வருவது விமானப் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை
-
காப்புரிமை விவகாரம்; இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை